சீரகம் : 100 gm மிளகு : 25 gm உ.பருப்பு : 25 gm மி.வற்றல் : 5 pcs பெ.காயம் : 1 tsp எண்ணெய் : கொஞ்சம்வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு வறுக்கவும். அதை ஒரு தட்டில் ஆற வைக்கவும். பிறகு மிளகு போட்டு சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு உ.பருப்பு, மி.வற்றல் இரண்டையும் சேர்த்து வறுக்கவும். வறுத்து எடுக்கும் போது அதில் சிறிது கறிவேப்பிலை {பொடி] போட்டு எடுக்கவும். பின் ஆற வைத்திருக்கும் சாமான்களைப் போட்டு அதனுடன் உப்பு, காயம் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். வயிறு உப்புசம் அதாவது பொருமல், காய்ச்சல் என்றால் இதை நெய், அல்லது எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Tuesday, November 8, 2011
சீரகப் பொடி
Labels:
சீரகப் பொடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment