வெள்ளை எள்ளு : 1/4 Kg
மிளகாய் வற்றல் : 30 gm
உளுத்தம் பருப்பு : 30 gm
உப்பு : சிறிது
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எள்ளை சிவக்க வறுக்கவும். அதை தட்டில் கொட்டி ஆற விடவும். பின் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாயைப் போட்டு வறுத்து அதையும் ஆற வைக்கவும். அதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதுவும் சாப்பாட்டிற்க்கு பிசைந்து சாப்பிடலாம். மிளகாய், உளுந்துப்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொண்டு அதன் பின் எள்ளைப்போட்டு அரைக்கவும்
No comments:
Post a Comment