Showing posts with label தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2. Show all posts
Showing posts with label தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2. Show all posts

Tuesday, November 8, 2011

தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2

இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு,பயத்தம் பருப்பு ,பச்சை பயறு , வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.
தேவையானவை:
மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 2 -3
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு
செய்முறை:
இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை கோட்டவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி
குறிப்பு: இதற்க்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி இலேயே செயலாம். தலித்ததும், கலைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். ‘நருக்குனு’ வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான்