Showing posts with label முழு உளுந்து பொங்கல். Show all posts
Showing posts with label முழு உளுந்து பொங்கல். Show all posts

Tuesday, November 8, 2011

முழு உளுந்து பொங்கல்

தேவையானவை:
முழு உளுந்து – 1/2 கப்
பச்சரிசி -1 கப்
இஞ்சி (நறுக்கியது) – 1/2 ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
இதுவும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது