Tuesday, November 8, 2011

கச்சான் அல்வா



தேவையான பொருட்கள்:
கச்சான் முத்து 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை
கோதுமை மா 2 தே.க

செய்முறை:

1. கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் கசக்கி புடைத்து பாதி முத்துக்களாக்கி கொள்க.
2. தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்க.
3. ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுத்துகொள்ளுங்கள்.
4. சீனி முழுவதும் இளகி பாகாக வரும் போது , அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்க.
5. பின்பு சீனி பாகில் கச்சான் முத்தை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும்.
6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டியெடுக்கவும்.


கச்சான் = peanut
சீனி = Sugar

பி.கு: மிகவும் இலகுவான சமையல், சுவையும் அதிகம். இந்த படம் நான் செய்த போது எடுத்தது. சமைத்து, உண்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

No comments:

Post a Comment