Tuesday, November 8, 2011

மீன் வறுவல்



"இவ என்ன எப்ப பார்த்தாலும் சாப்பாடு பற்றியே எழுதுறா / ஏதோ எழுதினா சரிதான் / கதை என எழுதி கொல்வதற்கு இதுவே பரவாயில்லை / என் தங்கை எது எழுதினாலும் ஒரு மறுமொழி போட்டுடணும் / வேலை நேரத்தில் உணவை காட்டி பசியை தட்டி எழுப்புறாங்கப்பா / என் பதிவில மறுமொழி போடுவதால் நாமும் ஒரு மறுமொழி போட்டு வைக்கலாம் / ஆகா தூயா பதிவு போட்டாச்சு, மறுமொழி எழுதி கலாய்ச்சிடலாம்" என நினைக்கும் என் நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் ஒரு சின்ன விருந்து: மீன் வறுவல்

என்னென்ன தேவை:

மீன் Red Mullet - 6
உள்ளி / வெள்ளைப்பூண்டு - 6
வெங்காயம் - 1
இஞ்சி விழுது - 1 மே.க
மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 1/2 மே.க
சீரகம் - 1 1/2 தே.க
எண்ணெய் - 3 மே.கா

எப்படி செய்யணும்:

- முதல்ல மீனை எடுத்து சுத்தம் பண்ணிக்குங்க. படத்தில் இருப்பது போல இருக்கணும். இதுவரை நான் மீனை சுத்தம் செய்யாததால் எப்படி என கேட்காதீர்கள். அண்ணன்களிடம் தான் நானே கேட்கணும்.


- படத்தில் இருப்பது போல மீனை இரண்டு பக்கமும் கீறிக்கொள்ளுங்கள்.


- Paper Towel இல் மீனை போட்டு வைக்கணும். ஏன் என்றால் மீனில் இருக்கும் நீர் தன்மை பேப்பரில் ஊறிப் போய்விடும்.

- இப்போ வெங்காயம், உள்ளி, இஞ்சி, தூள்வகைகளுடன் உப்பை சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க. இதில நீர் சேர்க்க வேணாம்.


- அரைத்த விழுதை எடுத்து மீனிற்கு இரண்டு பக்கமும் நன்றாக பூசி ஒரு மணி நேரம் ஊறவையுங்க. [பொறுமை இல்லாதவர்கள் இதை தவிர்க்கலாம்]


- எண்ணெயை சூடாக்கி முதலில் சீரகத்தையும், மிளகாயையும் ஒரு நிமிடத்திற்கு பொரியுங்க.பின்னர் அதிலேயே மீனை போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுங்கள்.

- தேசிக்காயை / எலுமிச்சங்காயை துண்டுகளாக்கி பரிமாறுங்க.



மிகவும் ருசியான, இலகுவாக தயாரிக்க கூடிய உணவு. சமைத்து, மற்றவங்களுக்கும் குடுத்து, நீங்களும் சாப்பிடுங்க

No comments:

Post a Comment