முதலில் தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்
தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு
செய்முறை:
வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

No comments:
Post a Comment