Tuesday, November 8, 2011

வெங்காய பகோடா

வெங்காய பகோடா


வெங்காய பகோடா



தேவையான பொருட்கள்:



கடலை மா - 250 கிராம்
வெள்ளை அரிசி மா- 150 கிராம்
வெங்காயம் - 2
மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 மே.க
உப்பு - தேவைக்கேற்ப
அப்பச் சோடா -


செய்முறை:



1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயையும், உள்ளியையும் அரைத்தெடுக்கவும்.


2.இரண்டு மாவையும் சேர்த்து நன்றாக சலித்தெடுக்கவும். இதில் உப்பு, அரைத்த மிளகாய், உள்ளி, வெட்டிய வெங்காயம் மற்றும் அப்பச்சோடா சேர்த்து கலக்கவும்.



3.எண்ணெயை சூடாக்கவும். இந்த எண்ணெயில் இரண்டு கரண்டி எடுத்து மாவில்விட்டு கலக்கவும். (நீர் சேர்க்க வேண்டாம்)



4.எண்ணெயை சூடாக்கி, மாவை போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். இறுதியில் கறி வேப்பிலையையும் பொறித்து பகோடாவில் போட்டு கலக்கவும்.



[ பகோடா போடும் முறை - தூளாக போட வேண்டாம். உருவங்கள் எதுவும் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கைகளால் பிசையும் போது வரும் சிறு சிறு துண்டுகளையே போட்டால் சரியானதாக இருக்கும்.]

No comments:

Post a Comment