Tuesday, November 8, 2011

குடைமிளகாய் சப்ஜி

தேவையானவை

  • குடைமிளகாய் - 5

  • பெரிய வெங்காயம் - 2

  • காரப்பொடி - 2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

  • கடலைப்பொடி - 4 தேக்கரண்டி

  • எண்ணெய் - 5 தேக்கரண்டி

  • சீரகம் - ஒரு தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு
 செய்முறை

குடைமிளகாயை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடலையை வாணலியில் வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் பொரித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

பின்னர் குடைமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்

சற்று வதக்கியதும் அதில் உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் நன்கு வெந்ததும், செய்து வைத்துள்ள கடலைப்பொடியை சேர்த்து கிளறவும்.

No comments:

Post a Comment