Tuesday, November 8, 2011

ரவை போண்டா

தேவையானவை :


  • ரவை - 2 கப்


  • தயிர் - ஒரு கப்


  • வெங்காயம் - 2


  • பச்சை மிளகாய் - 3


  • கொத்தமல்லி - சிறிது


  • கறிவேப்பிலை - சிறிது


  • உப்பு - தேவையான அளவு


  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

  • செய்முறை:
    ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை 3 மணிநேரம் ஊற வைக்கவும்

    3 மணிநேரம் கழித்து இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்.

    வெங்காயம் போன்றவை மாவில் சேருமாறு நன்கு பிசையவும்
    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு போண்டாவாக போட்டு பொரித்தெடுக்கவும்

    சுவையான ரவை போண்டா ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு சாஸ் மற்றும் தேங்காய் சட்னி நல்ல காம்பினேசன்

    No comments:

    Post a Comment