Tuesday, November 8, 2011

பனீர் ப்ரெட் கட்லட்ஸ்

தேவையானவை :


  • பனீர் - 100 கிராம்


  • உருளைக்கிழங்கு - அரைப் பாகம்


  • ப்ரெட் துண்டுகள் - 2


  • வெங்காயம் - அரைப் பாகம்


  • கொத்தமல்லி இலை


  • மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி


  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


  • உப்பு - தேவையான அளவு


  • ரவை - அரை தேக்கரண்டி


  • எண்ணெய் - தேவைக்கு

  • எப்படிச் செய்வது?
    பனீரை ரவை கலந்து 5 நிமிடம் நன்றாக பிசையவும். உருளையை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்

    ப்ரெட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிட்டு நீரில் நனைத்து எடுத்து பிழிந்து பனீருடன் சேர்க்கவும்

    இத்துடன் மசித்த உருளை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, தூள் வகை எல்லாம் ஒன்றாக கலந்து பிசையவும்

    உருட்டும் பதத்தில் பிசைந்து உருண்டைகளாக ஆக்கி விரும்பிய வடிவில் தட்டவும்

    தோசை கல்லில் எண்ணெய் விட்டு தட்டிய கட்லட்டுகளை போட்டு இரண்டு பக்கமும் சிவக்க திருப்பி போட்டு எடுக்கவும்

    விரும்பிய வடிவில் செய்யலாம். உருண்டைகளாக பிடித்து மைதா மாவில் டிப் செய்து எடுத்து எண்ணெயில் டீப் ஃப்ரை செய்யலாம். விரும்பினால் பிசையும்போது சிறிது டொமேட்டோ கெட்சப் சேர்க்கலாம்.

    No comments:

    Post a Comment