Tuesday, November 8, 2011

வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய

பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி  என எல்லாம் போட்டு கொதித்ததும்  இறக்கவும்.
பருப்புசாம்பார் போலவே, ரசம்  இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.
ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புளி யும் ‘திட்டமாக ‘ உபயோகிக்கலாம்.
வத்தல் குழம்புக்கும் இதே போல் தான்
புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.

No comments:

Post a Comment