Tuesday, November 8, 2011

மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல்

பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.
தேவையானவை:
மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு
செய்முறை:
மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த தானியத்தை , போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
மிளகாய் பொடி தூவி கிளறவும்.
வாசனை போனதும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி

No comments:

Post a Comment