Tuesday, November 8, 2011

பால் பாயசம்

தேவையானவை :
அ‌ரி‌சி – 1 க‌‌ப்
பா‌ல் – 4 க‌ப்
ச‌ர்‌க்கரை – 2 க‌ப்
மு‌ந்‌தி‌ரி – 12
ஏல‌க்கா‌ய் பொடி – 1 தே‌க்கர‌ண்டி
நெ‌ய் – 2 மேஜை‌‌க் கர‌ண்டி
செய்முறை:
ஒரு வா‌ண‌லி‌யி‌ல் நெ‌ய் ‌வி‌ட்டு, அ‌‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
‌பிறகு வாணலி இல் ஒரு க‌ப் அ‌ரி‌சி‌க்கு, ஒரு க‌ப் பா‌ல், ஒரு க‌ப் த‌ண்‌ணீ‌ர் எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.
பால் ,த‌ண்‌ணீ‌ர் கலவை‌யி‌ல் அ‌ரி‌சி ந‌ன்கு வெ‌ந்து குழைய வே‌ண்டு‌ம்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அ‌ரி‌சி நன்கு வெந்ததும், ‌மீத‌மிரு‌க்கு‌ம் பாலை ஊ‌ற்‌றி அடி‌பிடி‌க்காம‌ல் ‌கிளற வே‌ண்டு‌ம்.
பா‌ல் சு‌ண்டி வரு‌ம்போது ‌தீயை ‌‌மிதமாக வை‌த்து‌வி‌ட்டு ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்கவு‌ம். ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏல‌‌க்கா‌ய் பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பா‌ல் பாயச‌ம் தயா‌ர்.

No comments:

Post a Comment